தோவாளை அருகே திடீர் விபத்து! சென்னை-கன்னியாகுமரி ஆம்னி பஸ் கவிழ்ந்து 40 பயணிகள் காயம்...!
Sudden accident near Thovalai Chennai Kanyakumari Omni bus overturns 40 passengers injured
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்குச் சென்ற ஆம்னி பஸ், இன்று அதிகாலை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே கோர விபத்தில் சிக்கியது.
சுமார் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, பின்னர் சாலையில் கவிழ்ந்தது.

மேலும், விபத்து ஏற்பட்டதும், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் போலீசார், பஸ்ஸில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு, காயமடைந்த 40 பேரையும் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகளின் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Sudden accident near Thovalai Chennai Kanyakumari Omni bus overturns 40 passengers injured