கோயிலுக்கு செல்லும் பட்டியலின மக்களை தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது - உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கோயிலுக்குள் செல்லும் பட்டியலின மக்களை தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் அமைந்துள்ள மங்களநாயகி அம்மன் கோயிலில் பட்டியலின சமூக மக்களை ஒரு பிரிவினர் கோவிலுக்குள் அனுமதிப்பது கிடையாது என்றும் திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுவதில்லை என்றும் கூறியும் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பட்டியலின சமூக மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவது தலை குனிவான விஷயம்.

சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உள்ளது. பிறப்பால் ஒருவரை உயர்வு தாழ்வு என்று பிரித்துப் பார்ப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றம் ஒருபோதும் இதை வேடிக்கை பார்த்து நின்று விடாது. பட்டியலின சமூக மக்களுக்கும் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட, திருவிழாவில் பங்கேற்க உரிமை உள்ளது.

இதனை உறுதி செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வட்டாட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் சமயத்தில் காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stop SC peoples in temple arrested in kundas act


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->