#திருப்பத்தூர் : கோவிலில் ஆபாசம்.. பக்தர்கள் முகம்சுளிப்பு.! நீதிமன்றத்திற்கும் அடங்காமல் நிகழ்ந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி  அருகே நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ஆபாச நடனம் அரங்கேறி உள்ளது. தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது சித்திரை மாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தமிழகமெங்கும் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நாயனசெருவு கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா  நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இந்நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக நடன நாட்டியாலயா விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும்  கேரளாவிலிருந்தும் நடன கலைஞர்கள் பங்கேற்றனர். அதில் நடனமாடிய பெண்கள் ஆபாச உடை அணிந்து சினிமா பாடல்களுக்கு நடனமாடினர்.

இவ்வாறு நடனமாடுவதை காவல்துறையினர் கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இதனால் கோபமடைந்த சமூக ஆர்வலர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social activists opinion that strict action should be taken against obscene dance in temple festivals


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->