மாணவர்களே உஷார்.!! வகுப்பை கட்டடித்தால் பெற்றோருக்கு குறுஞ்செய்தி - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மாணவர்களே உஷார்.!! வகுப்பை கட்டடித்தால் பெற்றோருக்கு குறுஞ்செய்தி - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.!

தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையில் எமிஸ் இணையதளம் மூலமாக பல்வேறு திட்டங்கள், இணைச் செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டு, எப்போது வேண்டுமென்றாலும் தேவைப்படும் தகவல்களை எடுக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயோ மெட்ரிக் மற்றும் பதிவேடு மூலம் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பதிவு, எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு 2021-2022 கல்வியாண்டில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எமிஸ் இணையதளத்தில் இதரப் பணிகள் மற்றும் சர்வர் பிரச்சினை காரணமாக வருகை பதிவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

அதனால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையை கண்காணிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை TNSED Attendance என்ற புதிய செயலியை கடந்த 2022-23 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த செயலி அப்டேட் செய்யப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை காலை, மாலை என்று  இருவேளையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இதன் மூலம், பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரம் கண்டறியப்பட்டு, அந்த தகவலை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் நடைமுறை இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, ‘‘மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது, சில நேரங்களில் பெற்றோருக்கு கூட தெரியாமல் இருக்கிறது. இதுபோன்ற மாணவர்களின் நிலையை பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில் நடப்பு கல்வியாண்டு முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கும் நடைமுறை பள்ளி திறக்கப்பட்ட ஜூன் 12 முதல் கடைப்பிடிக்கப்படுகிறது’’ என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sms send to parents mobile phone foe students leave


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->