யூடியூப் சேனல்கள் மீது புகார் அளித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.! - Seithipunal
Seithipunal


சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இரண்டு யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, அவர் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- 

"சமீப நாட்களாகவே, இரண்டு யூடியூப் சேனல்கள் என்னை பற்றியும், எனது குடும்பத்தினரைப் பற்றியும் கலைத் துறையினரைப் பற்றியும் தவறாக சித்தரித்து இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், உண்மைக்கு எதிராக கற்பனை செய்திகளை தவறான குறிக்கோளுடன் தொடர்ந்து வீடியோவாக பதிவு செய்து அதனை வெளியிட்டு வருகிறது. இதுபோன்ற யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும்

என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி தனிப்பட்ட முறையில் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும் அவரைக் கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smk partys leader sarathkumar complaints about two you tube channel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->