விண்ணை முட்டிய வெங்காயத்தின் விலை.. தொடர்ந்து விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் அரைத்து குறைவால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் தக்காளியின் விலை கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 30 ரூபாய் அதிகரித்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் மேலும் 30 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 200 ரூபாய் முதல் 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 220 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Small onion price increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->