அதிகாலையிலேயே அதிர்ச்சி - ஆறு பேரை காவு வாங்கிய ஆம்னி வேன்.! - Seithipunal
Seithipunal


அதிகாலையிலேயே அதிர்ச்சி - ஆறு பேரை காவு வாங்கிய ஆம்னி வேன்.!

சேலம் மாவட்டத்தில் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் ஒரு வயது குழந்தை சஞ்சனா உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் வேன் ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா என்பவர் பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிகாலையிலே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples died for accident in salem


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->