மனோவின் மனைவியை தாக்கி ரூ.2.5 லட்சம், 12 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற கிருபாகரன், 16வயது சிறுவனை கைது! - Seithipunal
Seithipunal


சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்ற இரண்டு சிறுவர்களை, மனோவின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சரமாரியாகத் தாக்கியதாக சொல்லப்பட்டது.

இதில், 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியான நிலையில், மனோவின் மகன் மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாகவும் சொல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ் (28), தர்மா (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

திடீர் திருப்பமாக இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டிய எதிர்தரப்பினர்  மனோவின் மகன்களை தாக்கியது அம்பலமானது. மனோவின் மகன்கள் ஜாகீர், ரபீக் ஆகியோரை 4 மோட்டார்சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டு கட்டை, கற்களை கொண்டு தாக்கியது உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வந்த நிலையில், பாடகர் மனோவின் வீட்டிற்குள் நுழைந்து அவரின் மனைவியை தாக்கி பணம் மற்றும் நகைகளை திருடி சென்ற புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மனோவின் மனைவியை தாக்கிவிட்டு காரில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம், 12 சவரன் தங்க நகைகளை திருடி சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கிருபாகரன் மற்றும் 16வயது சிறுவனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஏற்கனவே மனோவின் மகன்கள் இவர்களை தாக்கியதாக கொடுத்த புகாரில் முன் ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

singer mano wife Complaint case 2 arrest


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->