மனம் உருக மாணவர்களிடம் செல்லூர் ராஜு வைத்த கோரிக்கை.!  - Seithipunal
Seithipunal


பள்ளிப்பருவம் என்பது மீண்டும் கிடைக்காது. இந்தப் பருவத்தை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் உயர் பதவி வகிக்க வேண்டும் என்பது போன்ற கனவுகள் காண வேண்டும். என அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை வைத்துள்ளார். 

மதுரையில் உள்ள மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் தமிழக அரசு அவர்களை தத்தெடுத்து கல்வி வழங்கி வருகிறது. தனியார் பள்ளி சீருடைகளை விடவும், அரசு பள்ளி சீருடைகள் கண்கவர் வண்ணம் இருக்கிறது. உயர்கல்வி மேல்நிலை கல்வி தடைபடக் கூடாது என்ற காரணத்திற்காக மாணவர்களுக்கு ரூபாய் 5000 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிப்பருவம் என்பது மீண்டும் கிடைக்காது. இந்தப் பருவத்தை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் உயர் பதவி வகிக்க வேண்டும் என்பது போன்ற கனவுகள் காண வேண்டும். மாணவர்கள் நடந்து சென்று கல்வி கற்க வேண்டும் என்ற அவசியமில்லை. உலகில் எந்த நாட்டிலும் கொண்டு வர திட்டம் இலவச மடிக்கணினி திட்டம் இந்த திட்டம் தொடங்கிய ஆண்டு முதல் 42 லட்சத்து 68 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பொது அறிவுத்திறனை வளர்க்க இது உதவுகிறது.

தமிழக அரசு வழங்கும் பல திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும், பெண்களுக்கு என்று சிறப்பு திட்டங்கள் பல கொண்டு வந்துள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டம் பெண் சிசுக் கொலை தடுக்க காரணமாக அமைந்தது." என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju speech in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->