பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட தொடர் பிரச்சனை! கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


சேலம், கொங்கணாபுரத்தில் உள்ள பேக்கரி கடையில் பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தைகளை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக பேக்கரி கடைக்குச் சென்று இது தொடர்பாக கேட்டறிந்த போது அங்கிருந்த ஊழியர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் உடனடியாக இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரி கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selam children eat puff after vomiting fainting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->