'' சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதில்லை ''..! லாரன்ஸ்க்கு சீமான் அளித்த பதிலடி..! - Seithipunal
Seithipunal


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது.  விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான  ராகவா லாரன்ஸ், இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டியதன் அவசியம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 

இவருக்கு, சூப்பர் ஸ்டார் என்னும் பெயரே ஒரு பப்ளிசிட்டி தான். இதற்கு மேல், அவருக்கு எதுக்கு பப்ளிசிட்டி. தான் அரசியலுக்கு வருவேன் என்று என் தலைவன் சொன்ன போது  கூட ஒவ்வொரு  அரசியல் கட்சி தலைவரிடம் என்ன பிடிக்கும் என்பதை குறிப்பிட்டு புகழ்ந்து இருந்தார். அதிலும் குறிப்பாக  மு.க.ஸ்டாலின் தொடங்கி சீமான் வரை அனைவரையும் புகழ்ந்துள்ளார். 

நான் இந்த மேடையில் இப்படி பேசினதுக்குத் தலைவர் என்கிட்ட பேசலனாலும் பரவாயில்ல. ஆனா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். சீமான் பேச்சு  நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.  இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ராகவா லாரன்ஸ் விமர்சனம் குறித்து பதிலளித்துள்ளார். அதில், தம்பி  லாரன்ஸ் சொல்வது  எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை. நான் என் நாட்டிற்காக என் மக்களுக்காகப் பேசி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman replies to lawrence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->