சீசன் டிக்கெட் பயன்படுத்து பயணிகளுக்கு குஷியான செய்தி., இனி நீங்க இவ்வளவு தூரம் பயணம் செய்யலாம்!! - Seithipunal
Seithipunal


சென்னை கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களில் பயணம் தினமும் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக சீசன் டிக்கெட் ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று மற்ற ரயில்களில் இருந்து வருபவர்களுக்கும் ரயில்வே சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. ரயில்வே வகுத்துள்ள விதிகளின்படி பயணிகள் சீசன் டிக்கெட்டில் 150 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். 

150 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் அரக்கோணம், திருத்தணி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட வெளியூர்களிருந்து வந்து செல்லும் பயணிகளுக்கு இது பெரும் சிக்கலாக இருந்துவந்தது.

இந்தநிலையில், தற்போது150 கிலோ மீட்டர் தூரம் என்பதை 10 கிலோ மீட்டர் தூரம் அதிகரித்து 160 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள இடங்களுக்கு ரெயில்வே சீசன் டிக்கெட்டை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.இந்த பயண தூரம் நீட்டிப்பு அரக்கோணம், திருத்தணி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட வெளியூர்களிருந்து வந்து செல்லும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.

இதன், அடிப்படையில் சென்னை-அரக்கோணம் இடையேயான சீசன் டிக்கெட் பயண தூரம் 10 கிலோ மீட்டர் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து காட்பாடி வழியாக மேலஆளத்தூர் வரையும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை பூங்கா, சென்ரல் வழியாக குடியாத்தம் வரையும் சீசன் டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சீசன் டிக்கெட்டுகள் யூ.டி.எஸ் செயலி மூலமாக எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

season ticket distance increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->