மணல் குவாரி முறைகேடு.. 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆப்பு... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அரங்கேறிய மணல் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மாறு அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி 5 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கு விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர்களின் பிரதிநிதிகள் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் அமலாக்க துறையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் மதித்திருக்க வேண்டுமா? என காட்டமாக நீதிபதிகள் கேள்வி கேட்க அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியர்களிடம் தரவுகள் இல்லாத போது ஆஜராவதில் பயனில்லை என வாதிட்டார். 

மேலும் மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர். மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறை சம்மனுக்கு திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பல முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC directs District Collectors to appear before ED for probe into sand quarry scam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->