வீரியம் நிறைந்த வினோதமான மலை... சதுரகிரி மலை..! - Seithipunal
Seithipunal


மதுரையில் இருந்து ஏறத்தாழ 78கி.மீ தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து ஏறத்தாழ 112கி.மீ தொலைவிலும், ராஜபாளையத்தில் இருந்து ஏறத்தாழ 42கி.மீ தொலைவிலும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஏறத்தாழ 27கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள மலைதான் சதுரகிரி மலை.

அடர்ந்த காடுகள், அதில் அருவி, சலசலக்கும் ஆறு என பச்சை பசுமையாகக் காட்சி தருகிறது சதுரகிரிமலை. இந்த மலைப்பகுதியில் ரம்மியமான சூழ்நிலையில் சுனை அருவி ஒன்றும் உள்ளது. 

மலையின் மீது நடந்தால்கூட எவ்வித அலுப்பும் இன்று துவக்கத்தில் இருந்த புத்துணர்ச்சியோடு பயணித்து வரலாம் என்பது கூடுதல் சிறப்பு. 

அபூர்வ சக்தி படைத்த மூலிகைகள், அதிசய மரங்கள், விலங்குகள் நிறைந்த வனம்தான் சதுரகிரி மலை.

சாதாரண மலைகளைப் போல் இல்லாமல் வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற ரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சதுரகிரி மலை ஏறும் வழியில் சில நீரோடைகளும், சிறிய அருவிகளும் உள்ளன. பயணத்தின் பாதி வழியில் நாவல் ஊற்று என்னும் வற்றாத சிறிய சுனை உள்ளது. 

தெளிந்த, சுவையான இந்த தண்ணீர் நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. 

மலையேறத் துவங்கியதில் இருந்து முதலில் நம் கண்ணில் தென்படுவது சந்தன மகாலிங்க கோவில்.

இதனருகே உள்ள ஒத்தையடி பாதை வழியே சென்றால் அடர்ந்த காட்டுக்குள் ஒரு காளி சிலை உள்ளது. 

இங்கு ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களைத் தீர்க்கவல்லது. 

இந்த மலையேற்றத்தின்போது வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்று பட்டு நோய்கள் குணமாவதாக கூறுகின்றனர்.

சந்தன மகாலிங்கம் கோவிலில் இருந்து பார்த்தால் தவசிப் பாறை சிறியதாகத் தெரியும். திசைக்கு நான்கு கிரிகள் (மலை) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது.

மற்ற நாட்களை விட சித்ரா பௌர்ணமி நாட்களில் இம்மலைக்கு அதிகமான மக்கள் வருகை தருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிக அளவு மக்கள் வழிபடுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sathuragiri hills


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->