சேலம் உருக்காலையில் 68 பாம்புகள் பிடித்து, பத்திரமாக வெளியேற்றம்..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பொட்டனேரி பகுதியில் ஜே.எஸ்.டபிள்யூ இரும்பு உருக்காலை 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்த ஆலை வளாகத்தில் ஏராளமான பாம்புகள் இருந்துள்ளது. இந்த பாம்புகள் அந்நிறுவன அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசித்து வரும் மக்களும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆளை நிர்வாகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூரில் இருக்கும் இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தின் உதவியை நாடியுள்ளனர். 

இவர்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் இன்று வரை 7 நாட்களுக்கு ஆளையில் தங்கியிருந்து, பாம்புகளை உயிருடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் முயற்சியை தொடர்ந்து நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு, தண்ணி பாம்பு, சாரை பாம்பு, அரியவகை ரசூல் என 68 பாம்புகள் மொத்தமாக பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்புகள் அனைத்தும் பத்திரமாக பிடிக்கப்பட்டு, வனத்துறை மேட்டூர் அலுவலர் பிரகாஷ் முன்னிலையில் காட்டுக்காப்பில் விடப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem JSW Plant Snake Capture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->