விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடையில்லை - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி.! - Seithipunal
Seithipunal


விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடையில்லை - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி.!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது. அதுமட்டுமல்லாமல், சிலையை வாங்குபவர்களிடம், அதனை ஆற்றில் கரைக்க மாட்டோம் என்று உறுதிமொழி வாங்கிவிட்டு சிலைகளை விற்கலாம். 

வீட்டில் வைத்து வழிபடுவதற்கு, விநாயகர் சிலைகளை வாங்குவோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு, அவர்களை போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்" என்று பல அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sale vinayagar statue in tirunelveli madurai HC order


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->