சென்னையில் ரூ.200 கோடி ஹவாலா பணம்.. வசமாக சிக்கிய அரசியல் புள்ளி.. IT, ED தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


துபாயிலிருந்து ஹவாலா முறையில் 200 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொண்டுவர முயன்ற நபர் சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார். மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத்குமார் ஜோசப் என்ற நபர் அவள முறையில் பணம் கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

துபாயில் உள்ள செல்வம் என்பவரிடமிருந்து ரூபாய் 200 கோடியை கைமாற்ற ஜோசப் திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அந்த 200 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை தமிழகத்தில் உள்ள அப்பு என்கிற விநாயகவேலனிடம் ஒப்படைக்க வினோத் குமார் ஜோசப் திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

அப்பு என்கிற விநாயகவேலன் பிரபல அரசியல் கட்சிக்கு தேர்தல் பணியாற்றி வருபவர் என தகவல் வெளியாகியுள்ளது. மௌனிகா விரோலா என்ற வைர நிறுவனம் மூலம் பரிமாற்றத்தில் ஈடுபட்ட திட்டமிட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலும் கிடைத்துள்ளது. 

இந்த விவரங்கள் வினோத்குமார் ஜோசப்பிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 200 கோடி ரூபாய் அவால பணம் தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வினோத் கமார் ஜோசப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதிகாரியாளர் கைது செய்யப்பட்ட வினோத் குமார் ஜோசப் பிரபல ஹவாலா ஏஜென்ட் என்பது தெரிய வந்ததை அடுத்து அவரிடம் இருந்த லேப்டாப், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs200 cross political party hawala money seized Chennai airport


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->