2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய ரோப் கார் சேவை - மகிழ்ச்சியில் பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய ரோப் கார் சேவை - மகிழ்ச்சியில் பக்தர்கள்.!

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதையே பிரதான வழியாக உள்ளது.

இருப்பினும், பக்தர்கள் சிரமமில்லாமல் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின்இழுவை ரெயில் உள்ளிட்ட சேவைகளும் உள்ளது. இந்த சேவை விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக உள்ளது. 

இந்த ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த பனியின் போது ரோப் கார் சேவை நிறுத்தப்படும். அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ரோப் கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதன் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த பராமரிப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பழனி கோவிலில் ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rope car service start in palni temple after two months


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->