மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை..! - Seithipunal
Seithipunal


சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ், சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலம் முதல் செல்பி பாயிண்ட் வரை சுமார் மூன்று கி.மீ. நீளத்திற்கு 'ரோப் கார்' பாதை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த ரோப் கார் பாதை அமைப்பது சாத்தியமா? என்பதை ஆய்வு செய்வதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை வரை 4.60 கி.மீ. நீளத்தில் 'ரோப் கார்' திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகம் உள்பட இந்தியாவில் மொத்தம் பத்து இடங்களில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு தற்போது மத்திய அரசு சார்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் அனுப்பியுள்ளது. அதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு அதில், "ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் 24 மாதங்களுக்குள் ஆய்வு செய்து, சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி, சென்னையில் இந்த ரோப் கார் திட்டம், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர் வழியாக பெசன்ட்நகர் வரை கடற்கரையை ஒட்டியே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rop car facility between merina to besant nagar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->