100 ஆண்டு பழமையான வீடு சீரமைப்பு...! பெயிண்டர் கையால் 6½ பவுன் சங்கிலி திருட்டு! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருடைய மனைவி 50 வயதான கிருஷ்ணவேணி உடையார்பட்டி, நெல்லை சந்திப்பில் இருக்கும் 100 ஆண்டுகள் பழமையான வீட்டை சீரமைத்து வருகிறார்கள். அந்த வீட்டு வர்ணப்பணியில் அப்பகுதியை சேர்ந்த பெயிண்டர் 56 வயதான நடராஜன், உள்ளிட்ட சிலர் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் மதியம் கிருஷ்ணவேணி தனது கைப்பையில் வைத்திருந்த தங்க நகைகளை கவனித்த நடராஜன், அதிலிருந்த 6½ பவுன் சங்கிலியை சூழ்ச்சியுடன் திருடியுள்ளார். இதில் திருடப்பட்ட சிறிது நேரத்தில் பையை பார்த்த கிருஷ்ணவேணி, சங்கிலி காணாமல் போனதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடத்திய விசாரணையில், நடராஜன் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் அவரை கைது செய்த காவலர்கள் தங்க சங்கிலியையும் அவரிடமிருந்து மீட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Renovation 100 year old house 6 and half pound chain was stolen by painter


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->