#BigBreaking | கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை (ரெட் அலெர்ட்) தொடரும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "மேற்கு வங்கக் கடல் பகுதிகள் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை ஓட்டிய பகுதியில் நிலவுகிறது. தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் கேரளப் பகுதியைக் கடந்து அரபிக்கடலில் பகுதிக்கு செல்லும். 

 

வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 12, 13 தேதிகளில் பரவலாகவும், ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை முதல் கடலூர் வரையான வடகடலோர மாவட்டங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட வட உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் மிக கனமழை தொடரும்" என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red Alert Cuddalore And Delta 12.11.2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->