மண்டபத்தில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள்.! ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள இராமேசுவரம் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிறமாற்றத்திற்கு., வெளிநாடுகளின் சரக்கு கப்பல்களில் இருந்து காட்டப்பட்டுள்ள கழிவுகள் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இதனால் பவளப்பாறைகளுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதி மற்றும் இராமேஸ்வரத்தின் மண்டபம் கடல் பகுதிகளில் பச்சை நிறம் காணப்படுவதோடு., கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது மீன்களும் இறந்து கரைகளில் ஒதுங்கியது. இந்த விஷயம் குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் சார்பாக ஆய்வும் நடத்தப்பட்டது. 

பவளப்பாறைகள்,

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில்., "நோக்டிலுகா மரைன் மைக்ரோ ஆல்கா" என்று அழைக்கப்படும் பாசிகள் இனப்பெருக்கம் அதிகளவு நிகழ்ந்துள்ளதால்., பாசிகள் தாக்கம் அதிகரித்ததால் மீன்கள் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் கடலில் நியூட்ரானின் அதிகரிப்பு மற்றும் பாசிகள் அதிகளவு இலங்கை கடற்பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு கப்பலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் காரணமாகவே இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்., சுமார் இரண்டரை டன் அளவிற்கான மீன்கள் இறந்துள்ளதாகவும்., மன்னர் வளைகுடா பகுதியில் இருந்த பவளப்பாறைகளுக்கு எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என்று தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for Corals and fishes died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->