நியாயவிலைக்கடைகளில் கருவிழியின் மூலம் பொருட்கள் தர நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கியது. கவர்னர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தயாரித்து கொடுக்கப்பட்ட உரையில் ஆளுநர் சில வார்த்தைகளை தவிர்த்துள்ளார்.

இதைக் கண்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது ஆளுநர் திடீரென வெளிநடப்பு செய்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இன்று நடைபெறும் மூன்றவது நாள் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்ததந்த துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது, "தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த புதிய முறையின் பரிசோதனை முயற்சியாக நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தலா ஒரு நியாயவிலைக் கடைகளில் அமல்படுத்தப்படும். நியாய விலைக்கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ration things donate by iris scan in stores minister sakkarapaani information


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->