ஆன்லைனில் வாங்கிய ஆண்டிராய்ட் போனால் சிறுவனுக்கு நேர்ந்த கதி.! 4 மாதங்களில் நிகழ்ந்த சோகம்.!  - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்ட குப்பம் பகுதியில் முனியாண்டி என்ற நபர் டிபன் கடை நடத்தி வரும் நிலையில், இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் முத்து என்ற 16 வயது மகன் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் முத்துவின் மாமா இவருக்கு ஆன்லைன் மூலம் ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிக் கொடுத்துள்ளார்.

12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்த செல்போனை முத்து கடந்த நான்கு மாதங்களுக்கும் மேல் பயன்படுத்தி வந்த நிலையில், நேற்று தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது அந்த செல்போனை பேண்ட் பாக்கெட்டில் அவர் வைத்திருந்துள்ளார். அப்போது அந்த போன் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்துடன் மரத்தின் மீது மோதி முத்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தீக்காயமும், ரத்தக்காயமும் ஒரு சேர ஏற்பட்டது. பைக்கில் பயணித்த உறவினர் மனோகரனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட செல்போன் நான்கே மாதங்களில் வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranippettai 16 years old Young boy Mobile blasted


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->