பலரது உயிரை காப்பாற்றிய நர்ஸின் உடலை புதைக்க இடம் தராத மக்கள்.!  - Seithipunal
Seithipunal


இரவு பகல் பாராமல் பொது மக்களை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்து வருகின்றனர். 

இருப்பினும், அந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் பொதுமக்கள் அவர்களுடைய உடலை எங்கள் பகுதியில் அடக்கம் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற செய்திகளை நாம் அவ்வப்போது கான் நேரிடுகின்றது.

அதுபோல ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த அர்ச்சனா என்ற நர்ஸ் திடீரென கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார். அர்ச்சனாவின் உடலை அவரது உறவினர்கள் புதைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்,

இந்த நிலையில் அந்த கிராமத்து மக்கள் திடீரென இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் நர்ஸ் அர்ச்சனாவின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த காரணத்தால், இறந்த உடலுடன் அவருடைய உறவினர்கள் தவித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த சம்பவத்தால் ராணிப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet Nurse death peoples protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->