வடமாநில குற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா புண்ணிய பூமி.!! ராமேஸ்வரத்தில் தொடரும் கைதுகள்.!! - Seithipunal
Seithipunal


வட மாநிலங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதிகளில் பதுங்கும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு.!!

தமிழகத்தின் புண்ணிய பூமியாக கருதப்படும் ன ராமேஸ்வரத்தில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளில் நூற்றுக்கணக்கானோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வட மாநிலத்தவர்கள் ராமேஸ்வரத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்குவது வழக்கம்.

அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வட மாநில குற்றவாளிகள் தஞ்சம் புகுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூரில் 3 கொலைகளைச் செய்த குற்றவாளிகள் மண்டு சர்மா, கோவிந்த் குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

அவர்கள் பயன்படுத்திய செல்போன் சிக்னல் மூலம் ராமேஸ்வரத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. ராமேஸ்வரத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த இருவரையும் உள்ளூர் போலீசார் உதவியுடன் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீகாருக்கு அழைத்துச் சென்றனர்.

அதே போன்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பப்பு நாயக், சுமந்த், தாஸ் ஆகிய 3 பேர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட வந்த நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கிருப்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்த ஒடிசா மாநில போலீசார் மூவரையும் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புண்ணிய தலங்களுக்கு வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் குவிவதால் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு சில விடுதிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிக்காமல் தங்க வைப்பதால் வட மாநிலக் குற்றவாளிகள் பதுகுவது தொடர் கதையாகி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஒரு சில தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை எனவும், சந்தேகப்படும் வெளிமாநில நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமல் விடுவதாகவும் இதனால் வடமாநில குற்றவாளிகளின் புகலிடமாக ராமேஸ்வரம் மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.

எனவே காவல்துறை வெளிமாநிலத்தவர்களை விடுதியில் அனுமதிக்கும்போது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் அடையாள அட்டைகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து சரிபார்த்துக்க விடுதி உரிமையாளர்களை அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameswaram becomes haven for northern states criminals


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->