ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவது சந்தேகம் தான்! பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சு பல மாதங்களாக வந்த நிலையில், அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்திருந்தபோது பிரதமர் தமிழ்நாட்டில் பதவிக்கு வரவேண்டும் என்பதே பா.ஜனதாவின் எண்ணம் என்று தெரிவித்திருந்தது இதை உறுதிப்படுத்தியது. 

இதே போல் ராமநாதபுரத்தில் இருந்து அண்ணாமலை யாத்திரையையும் தொடங்கி அவர் பேசும்போது மோடி, இதயத்தால் தமிழராக வாழ்கிறார். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட எங்களுக்கும் ஆசை. இதற்கான முடிவுகள் கட்சி தலைமை தான் எடுக்கும் என்றார். 

இது குறித்து கடந்த 9-ந்தேதி ஏற்கனவே ஐதராபாத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான பா.ஜனதா மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கபட்டபோது, தென்மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்றதை சுட்டிக்காட்டி மோடியும் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது நல்லது. 

ஆனால் தென்மாநிலங்களில் போட்டியிட்டாலும் காங்கிரசுக்கு 30 சதவீத வாக்குகள் இருந்ததே இந்திரா, ராகுல் ஆகியோர் வெற்றிக்கு காரணம். தமிழகத்தில் அந்த நிலைமை இல்லை. பா.ஜனதா கட்சியின் வாக்கு சதவீதம் மிக குறைவாக இருக்கிறது. 

பா.ஜனதாவுக்கு தமிழகத்தை பொறுத்தவரை கோவை, கன்னியாகுமரி ஆகிய இரண்டு தொகுதிகளும் செல்வாக்கான தொகுதிகளாக இருக்கிறது. இந்த தொகுதிகளில் 85 சதவீதம் பூத் கமிட்டிகளும் வலுவாக இருப்பதாக தெரிகிறது. 

எனவே ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவதற்கு சாதகமாக இருக்கா? என்ற நிலவரம் மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டு, ராமநாதபுரத்தில் போட்டியிடும் திட்டத்தை கைவிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. 

ஆனால் இதுபற்றி பா.ஜனதா செயற்குழு உறுப்பினர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவிக்கும்போது, ''ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பமாகும். இது குறித்து பிரதமருக்கு ஏராளமானோர் கடிதங்கள் அனுப்புகின்றனர். 

ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் எல்லா தொகுதிகளின் நிலைமைகள் மாறும் என்பதால் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பெரும் பயத்தில் உள்ளதால்தான் அவர்களும் ராமநாதபுரத்தில் தனிக்கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வாய்ப்பும் இருப்பதாகவே கருதுகிறோம்'' என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanthapuram Modi contest plan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->