"டெல்டா, வடமாவட்டங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது" ராமதாஸ் உருக்கம்!!  - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுகள் எழுதிய மாணவ, மாணவிகளில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது. வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடைசி இடங்களை பெற்றுள்ளது. இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கிறது. அம்மாவட்டங்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.20%  மாணவ, மாணவியர் வெற்றி பெற்றிருப்பது  மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டுகள். தோல்வியடைந்த மாணவச்செல்வங்கள்  மன உறுதியை இழக்காமல்  துணைத்தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்!" என தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadoss sad about north districts education results


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->