பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு: பின்வாங்கிய திராவிடர் கழகம்.! ரஜினிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினி 'துக்ளக்' விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி மேடையில் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.

அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில், செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. ஆனால் அப்போதே சோ நடத்திய 'துக்ளக்' பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.

Image result for rajini seithipunal

ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்தியதாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அரசியல் தரப்பு தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசிதாகவும் அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி திராவிடர் விடுதலை கழகம் ரஜினிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து ரஜினிக்கு  திராவிடர் கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth case withdraw by dravidar kazhagam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->