கோவை தடுப்பணையில் மழை நீரில் சாயக்கழிவு..மலை போல் குவிந்த நுரையால் பொதுமக்கள் அவதி!! - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களாக காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அதே போல் கோவை மாவட்டத்திலும் பரவலாக நேற்று முதல் கனமழை பொழிந்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நொய்யல் ஆறு வரும் வழியில் உள்ள ஆற்றுப்பாலம் சுண்ணாம்புக் கால்வாய் தடுப்பணையில் மழைநீருடன் சாயக்கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனால் தடுப்பணை முழுவதும் இந்த சாயக்கழிவு கலந்து வரும் மழை நீரால் ரசாயன நுரை அதிகளவில் தென்படுகிறது.

மேலும் வெள்ளலூர் மற்றும் சூலூர் வழியாக செல்லும் இந்த ரசாயனக் கழிவு கலந்த ஆற்று நீரில் துர்நாற்றமும் வீசுகிறது. ஆற்று நீர் செல்லும் வழித்தடமெங்கும் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் விவசாயத்திற்கும் மேலும் தனது சொந்த உபயோகத்திற்கும் அந்த நீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

சுண்ணாம்புக் கால்வாய் தடுப்பணையில் மழை நீருடன் கலந்து வரும் இந்த கழிவு நீர் வெள்ளை நிறத்தில் சோப்பு நுரை போல் மலை போல் குவிந்துள்ளது. எனவே தடுப்பணையில் ரசாயனக் கழிவு நீர் கலப்பதை தடுக்க தமிழக அரசு உடனடி நடடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rainwater at Coimbatore Barrage mountain like foam


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?




Seithipunal
--> -->