தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பேரிடர் காலங்களில் நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரருக்கு கேழ்வரகு வழங்கப்படும் என அமைச்சர் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்த திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

இதனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யும் அளவுக்கு கேழ்வரகு இல்லாததால் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் முதன்முறையாக தொடங்கப்படுவதாகவும் அதன் பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவுத் துறை மூலம் சிறுதானியங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வேளாண் துறையுடன் இணைந்து சிறுதானியம் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ragi provided in rationshop from today in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->