இப்படி செய்து கொடுங்க… அப்புறம் அடிக்கடி செய்துதர சொல்லு வாங்க… சுவையான ராகி குலுக்கு ரொட்டி..! - Seithipunal
Seithipunal


ராகி குலுக்கு ரொட்டி

கேழ்வரகில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்கள் உள்ளது இது உடற்பருமன் குறைய உதவுகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சரி செய்வதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் சமநிலை ஏற்பட உதவும். ஆனால் சிலருக்கு  ராகி களி என்றால் அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அனைவரும்  விரும்பும் வகையில் இன்று ராகி குலுக்கு ரொட்டி செய்வது எப்படி என்று பாக்கலாம்.

தேவையானவை: பொருள் - அளவு

கேழ்வரகு மாவு                     ஒரு கப்
பச்சரிசி மாவு                         2 டேபிள்ஸ்பு+ன்
பொடித்த வெல்லம்              அரை கப்
வறுத்த வேர்க்கடலை          2 டேபிள் ஸ்பு+ன்
ஏலக்காய்த்தூள்                    சிறிதளவு
நெய்                                       தேவையான அளவு
உப்பு                                       தேவையான அளவு

செய்முறை :

கேழ்வரகு மாவை லேசாக வறுத்து பிறகு பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, பாகு பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் ஒருமுறை நன்றாக கிளரவும். சுட சுட ராகி குலுக்கு ரொட்டி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ragi Kuluku Rotti


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->