மத்திய அரசு விழாவை காரணம் காட்டி எஸ்கேப் ஆன ரவீந்திரநாத்! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் பெரியகுளம் அடித்த கைலாச பட்டி வனப்பகுதியில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கியிருந்தது. அதனை வனத்துறையினர் மீட்க முயற்சி செய்த போது உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கி விட்டு தப்பி சென்றது. பின்னர் அந்த சிறுத்தை மக்களவை உறுப்பினர் ரவிந்திரநாத் தோட்டத்தில் மறுநாள் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தது. சிறுத்தையின் உடலை அவசரகதியில் பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர் அதே இடத்தில் புதைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கடை அமைத்து ஆடு வளர்த்து வந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த கைது கண்டித்து பல்வேறு தரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தோட்டத்தின் மேலாளர்கள் ராஜவேல் மற்றும் தங்கவேல் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்த சிறையில் அடைத்தனர். 

மேலும் அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும்,  ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து வனத்துறையினர் சார்பில் ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஷர்மிலி என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இன்று ரவீந்திரநாத் ஆஜராகாத நிலையில் அவர் சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் வந்து வனத்துறையினரிடம் விளக்க கடிதத்தை அளித்துள்ளனர். இதுகுறித்து பேசிய ரவிந்த்நாத் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் "புதுடெல்லியில் நீர்வளத் துறையின் நதியின் மேம்பாட்டு கங்கை நதி புத்துயிர் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் சார்பில் ஏழாவது இந்திய நீர் வள விழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் சென்றுள்ளார். இதன் காரணமாக அவரால் மாவட்ட உதவி வன பாதுகாவலர் முன்பு ஆஜராக முடியவில்லை. சிறுத்தை உயிரிழந்ததற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே வனத்துறையினர் ரவீந்திரநாத்தை விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசி உள்ளார்.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு சரியாக ஆஜரான தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பன்னீர்செல்வத்தால் வனத்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகாகதது, அவரின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rabindranath Not present at Infront of forest officers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->