புழல் ஏரிக்கரை உடையும் அபாயம்.? சென்னை மக்களே உஷார்.!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 

இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியும் தனது முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த டிசம்பர் 4ம் தேதி முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புழல் ஏரியின் சுற்றுச்சுவர் உடைந்து சாலையும் சேதமடைந்துள்ள நிலையில் தற்போது குழல் ஏரியின் கரையும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். புழல் ஏரியின் கரை உடையும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுமையாக துண்டிக்கப்படும்.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் 4வது நாளாக மீட்பு பணியானது துரிதமாக நடைபெற்று வருகிறது. புழல் ஏரியில் கரை உடையும் நிலையில் இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நீர்வளத் துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puzhal Lake bank breaking danger for public


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->