கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு! இருவர் பலி, பலர் படுகாயம்!! முழு விவரம் உள்ளே...! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரையில், புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தப்பட்டது.

விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ், கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 

2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி உலக சாதனைக்காக நடத்தப்படுகிறது.  கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டனர்.  

இந்த போட்டியின் போது, மாடு முட்டியதில் சொரியம்பட்டியை சேர்ந்த ராமு(25) மற்றும் சதீஷ்குமார்(43) ஆகிய பார்வையாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தியது.  

இந்நிலையில், புதுக்கோட்டை விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

இதில் 1400 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உட்பட 41பேர் காயம் அடைந்தனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai Jallikattu Finished Now


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal