பொண்டாட்டிக்கு போன் பண்ணி வரச்சொல்லி, கொரோனா வார்டில் இருந்து ஜூட் விட்ட புதுக்கோட்டை வாலிபர்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், பலரும் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 32 வயது வாலிபர் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நிலையில், அவருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா நோய்தொற்று அறிகுறி இருந்த காரணத்தால் உடனடியாக அங்கிருந்த சிறப்பு வார்டில் அனுமதி செய்யப்பட்டார். 

இந்நிலையில், ஆத்திரமடைந்த வாலிபர் தனக்கு கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னதாகவே எதற்கு வார்டில் அனுமதி செய்தீர்கள்? என்று மருத்துவமனை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இப்படியாக இரவு வேலை ஆகிவிட்ட நிலையில், இரவு நேர உணவு வழங்க வந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கதவு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, எதிரில் வந்தவர்கள் மீது எச்சிலை உமிழ்ந்து தகராறு செய்துள்ளார்.

பணியில் இருந்த மருத்துவர் அவரிடம் சமாதானம் பேச முயற்சிக்கையில், அவரையும் தாக்க முயற்சித்து தகராறு செய்துள்ளார். பின்னர் தனது மனைவியை மருத்துவமனைக்கு வரவழைத்து, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த தலைமை மருத்துவர் சேகர், அந்த வாலிபரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கும் அவர்கள் ஒத்துழைக்காததால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும், நகராட்சி அதிகாரிகள் உங்களுக்கு தேவையான உதவியை செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Youngster Went Home with wife Youngster Admit and Make Corona Test 20 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->