முகக்கவசம் அணியாமல் வந்தால் சம்பவ இடத்தியிலேயே கொரோனா சோதனை.. மாஸ் மாவட்ட நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்ததன் எதிரொலியாக, கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,647 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,75,017 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,612 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 5,19,448 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 83 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 9,233 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் வலம்வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டு, இதற்கான சட்டமும் அமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் 8,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 132 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டினை விட்டு வெளியே வரும் நபர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால், கொரோனா பரிசோதனை சம்பவ இடத்திலேயே செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai District Collector Announce without travel facemask spot corona test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->