மதுபான கடைக்கு ஆதரவாக பேசிய திமுக கவுன்சிலரை விரட்டியடித்த பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் மது விலக்கு கோரி பல தரப்பட்டு மக்கள் போராடி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தை அடுத்த மேலூர் அருகே அரசு சார்பில் புதிதாக திறந்த மதுபான கடைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரை அடுத்து மேலூரில் உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் நத்தம் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் தமிழக அரசின் புதிய மதுபான கடை இன்று திறக்க இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் திடீரென சாலை மறிகளில் ஈடுபட்டனர். 

அப்பொழுது திமுக கவுன்சிலர் பாண்டி என்பவர் சாலை மறியலில் ஈடுபட்ட சுக்காம்பட்டி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயற்சி செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் திமுக கவுன்சிலர் பாண்டி மதுபான கடைக்கு ஆதரவாக பேசியதால் பொங்கி எழுந்த பொதுமக்களும் பெண்களும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தேர்தல் சமயத்தில் ஓட்டு கேட்டு வந்ததோடு சரி, அதன் பிறகு ஆளையே காணவில்லை என குற்றம் சாட்டி திமுக கவுன்சிலர் பாண்டியை விரட்டியடித்தனர். 

சமாதானம் செய்ய வந்த திமுக கவுன்சிலர் பாண்டியை விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு இருக்கும் பொழுது தமிழக அரசு எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை அமைத்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public chased away the DMK councilor spoke in favor of tasmac


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->