கோவை மாநகரில் தனியார் பள்ளி அதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது - Seithipunal
Seithipunal


பள்ளி நிர்வாக அதிகாரி விஜயகுமார் , உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்ததாக கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் .

கோவை மாநகரில் தனியார் பள்ளி ஒன்றில் நூற்றுக்கனக்கான  மாணவ - மாணவிகள் படித்து வருகிறாா்கள், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக்  கூறப்படுகிறது.  பள்ளியின் நிர்வாக அதிகாரியாக கணபதியை பகுதி  சேர்ந்த விஜயகுமார் (வயது 34), உடற்கல்வி ஆசிரியராக வெள்ளியங்காட்டை சேர்ந்த முரளிதரன் (வயது 35) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். முரளிதரனுக்கு திருமணமாகிவிட்டது. விஜயகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.

இரு ஆசிரியர்களையும் குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணான 1098க்கு தொடர்பு கொண்டு பெற்றோர் புகார் தெரிவித்தனர். கோவை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மதியழகன், கல்பனா ஸ்ரீதர் மற்றும் காவல் துறையினர் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விஜயகுமார், முரளிதரன், ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் போக்சோ, மிரட்டல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதில் வேறு மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்றும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private school official and physical education teacher arrested in POCSO in Coimbatore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->