ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை.. பிரேமலதா விஜயகாந்த் பதில்.! - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் (68) நேற்று இரவு சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு அனுமதிப்பட்டார். அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக குடுபத்தினர் தெரிவித்திருந்தனர். இதனிடையே, மருத்துவமனையில் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதையில் அவருக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் விஜயகாந்த் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சியினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி என்ற தகவல் வெளியானதும் கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விஜயகாந்த் மனனவி பிரேமலாதாவிடம்  தொலைபேசியில் பேசியுள்ளனர். விஜயகாந்த் உடல் நலம் முதல்வர் துணை முதல்வர் விசாரித்து தேமுதிக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இல்லமாக அரசு அறிவித்து, அங்கு ஸ்டிக்கர் ஓட்டிவருவது மாநகராட்சியின் முறை. அந்த முறையில் விஜயகாந்துக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து சென்னை சாலிகிராமம் கண்ணாம்பாள் தெருவில் உள்ள அவரது வீட்டின் கேட்டில், ‘தனிமைப்படுத்தப்பட்ட இல்லம்’ என்கிற ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக சென்னை மாநகராட்சி அலுவலர்கள் வந்துள்ளனர்.

ஆனால், விஜயகாந்த் வீட்டில் பணிபுரிவோர் சென்னை மாநகராட்சி அலுவலர்களை ஸ்டிக்கர் ஒட்ட விடாமல் தடுத்தனர். இதை ஏற்க மறுத்த மாநகராட்சி அலுவலர்கள் தங்களது கடமையை செய்யதே  தீருவோம் என பிடிவாதமாக இருந்தனர். ஆனாலும்  விஜயகாந்த் வீட்டில் பணிபுரிவோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் மாநகராட்சி அலுவலர்கள் ஸ்டிக்கர்  ஒட்டாமலே அங்கிருந்து சென்றனர். பின்னர் வந்து ஸ்டிக்கர் ஒட்டினர். 

இந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், " வீட்டில் நோட்டிஸ் ஏதும் ஒட்டக்கூடாது என்று நாங்கள் யாரும் கூறவில்லை. அரசின் விதிமுறையை நாங்கள் கட்டாயம் மதிப்போம். விஜயகாந்த் பூரண நலனுடன் வீட்டிற்கு வருவார் " என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PREMALATHA PRESS MEET ABOUT CHENNAI CORPORATION QUARANTINE STICKER ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->