சென்னையில் நள்ளிரவில் தொடர் மின்வெட்டு.. பொதுமக்கள் சாலை மறியல்.! - Seithipunal
Seithipunal


சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூர், அக்கரை, ஈஞ்சம்பாக்கம் உதண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தினமும் இரவில் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் நள்ளிரவை தாண்டியும் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், நீண்ட நேரம் மின்னிறுத்தம் காரணமாக குழந்தைகள், இதய நோயாளிகள் முதியோர்கள் உள்ளிட்டோர் தூக்கமின்றி தவிப்பதாக குற்றம் சாட்டினர். 

அதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதே போன்று தொடர்ந்து மின்வெட்டு நீடித்தால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் போலீஸ்காரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து போக்குவரத்தை சரி செய்யப்பட்டு சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power cut in ECR peoples protest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->