பேரிடர் நிவாரண பணி - ஒரு கோடி வழங்கிய போத்தீஸ் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பெல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், மக்கள் தங்குவதற்கு வழி இல்லாமல், வீட்டை விட்டு வெளியில் வர முடியாமலும் தவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரமன் வழங்க தமிழக அரசு முடிவெடுத்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும், பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், திரை பிரபலங்கள் என்று பல்வேறு தரப்பினரும், தொடர்ந்து நிதி அளித்து வருகின்றனர். 

அந்த வரிசையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.ரமேஷ், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pothys company one crore provide to cm stalin for floods


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->