குஷ்பு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டர் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதாவது, "திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால், என்ன நடந்தது, என்ன பேசினார்கள். 

என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்ணைத் திறந்து பாருங்கள். திமுக உங்களுக்கு சட்டங்களைக் கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது" என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தப் பதிவு தொடர்பான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு நடிகை குஷ்புவுக்கு எதிராக கடும் எதிர்ப்புக்கள் எழுந்து வந்ததையடுத்து, காவல் ஆணையர் அலுவலகத்திலும் நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் நாளை மாலை 5 மணிக்குள் நடிகை குஷ்பு பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.

அப்படி கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகையிடப்படும். அவர் தமிழகமெங்கும் நடமாட முடியாது என்று பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police guard in front of actor kushboo house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->