முகநூல் காதல் வலையில் சிக்கும் அப்பாவி பெண்கள்.. எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 35). இவர் பொறியாளராக பணியாற்றி வருகின்றார். இவர் முகநூல் மூலமாக சுமார் நூற்றுக்கும் அதிகமான பெண்களிடம் காதல் வலை வீசியுள்ளார். மேலும், இவ்வாறாக வலைவீசப்பட்ட பெண்கள் வயது அதிகமான பெண்களும், அரசு மருத்துவர்களும், வங்கி அதிகாரிகளும், பேராசிரியர்களும் ஆவார்கள். 

இவ்வாறாக சுமார் 9 பெண்களிடம் தன்னை வெளிநாடு வாழ் இந்தியர் என்று என்று அறிமுகம் செய்து காதல் ஏக்க வலையை விரித்துள்ளார். மேலும், தனக்கு தகுந்த நேரத்தில் வந்த பொய்யை கூறி ஒன்பது பெண்களுடனும் வெவ்வேறு நட்சத்திர விடுதியில் நிச்சயதார்த்தமும் செய்துள்ளார். மேலும், திருமணத்திற்கு முன்னதாகவே சாந்திமுகூர்த்தமும் நடைபெற்று முடிந்துள்ளது.

இதனையடுத்து இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மையை அறிந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருக்கவே, இது தொடர்பாக சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் சக்கரவர்த்தியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பான விசாரணையில், பெண்களிடம் பணம் மற்றும் நகை என ரூ.7 கோடிக்கும் மேலாக மோசடி செய்துள்ளதும், இந்த பணத்தை வைத்து "சக்கரவர்த்தி பில்டர்ஸ்" என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தற்போது தன்னை வெளிநாடுகளில் பணியாற்றி வரும் நபர் என்று கூறி முகநூல் மூலமாக பெண்களிடம் பழகி நகைப்பறிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்த விஷயத்தை காவல் துறையினர் தெரிவித்துள்ள நிலையில், சமூகவலைதங்களில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் விதம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் மற்றும் எச்சரிக்கை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். மேலும், இணையதளங்களில் வரும் நட்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்திய பின்னர், தங்களுக்கு தெரிந்த நபர்களாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும், பிரபலங்களின் பெயர்களில் சாட்டிங் செய்யவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police gives awareness about social media girl handling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->