பாஜகவுடன் கைகோர்த்த பாமக.! 10 தொகுதிகளில் போட்டி.! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை சில சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைந்துள்ளன. 

இதேபோல், பாஜகவும் தமது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இருப்பினும் இந்த இரு கட்சிகளும் தற்போது வரை கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வந்தது. தேமுதிக தரப்பில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும், அதிமுகவுடன் தற்போது வரை தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யவில்லை. 

இந்த நிலையில், இன்று பாமக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணியில் பாமக இணைய போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை கேட்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்கிறது பாமக என கூட்டணியை பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk joined bjp for parliment election


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->