பாமக தேர்தல் அறிக்கை: திமுக இதை மட்டும் செய்திடாதிங்க!! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு!. - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. 

இந்த மக்களவை மற்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட திமுக-காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளது. அதிமுக பாமக பாஜக என ஒரு கூட்டணியும் அமைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்று பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்துள்ளது.

இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தங்களது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதனை வெளியிட்டார். 

அதில், சமூக நீதி, தனியார் துறை இடஒதுக்கீடு, வருமான வரி, ஜிஎஸ்டி, மதுபுகை ஒழிப்பு, அரசு ஊழியர்கள் நலன், வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி, கல்வி, தமிழ் இலக்கமுறை நூலகம், 7 தமிழர்கள் விடுதலை, கட்சத்தீவு மீட்பு, தேர்தல் சீர்திருத்தங்கள்,  60 வயதை கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.

வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். பல முக்கிய அம்சங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கப்படும். இதை மனதில் வைத்தே இந்த தேர்தல் அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். திமுக எங்களது தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கக் கூடாது என்றார்.

பாமகவின் முழு தேர்தல் அறிக்கையை தெரிந்துகொள்ள கீழே உள்ள  பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்
https://drive.google.com/drive/folders/1czVAOu96wk59bAW5RMqF4rCvohlmC-oT

https://goo.gl/RzoC94 

English Summary

pmk Election Statement


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal