வன்னியர் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளருக்கு டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்.. செய்வீர்களா?..!! பாராட்டு விழா பேச்சு முழு விபரம்.!! - Seithipunal
Seithipunal


கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர் சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம், தனது முதற்கட்ட வெற்றியாக வன்னியர்களுக்கு எம்.பி.சி பிரிவில் 10.5% இட ஒதுக்கீடை முதற்கட்ட வெற்றியாக அடைந்துள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, வன்னியர்களுக்காக கடந்த 42 வருடமாக போராடி வந்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு நேற்று இணையவழியில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், " நான் மற்றவர்களை பாராட்டி இருக்கிறேன். ஆனால் எனக்கு பாராட்டா? என்ற கேள்வி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நான் மகிழ்ச்சியாக பாராட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், இறுதியாக மாநில இளைஞர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி கூறியதை நீங்கள் மறந்துவிட கூடாது. எனது நீண்ட நாள் கனவு. வன்னியர் சங்க போராட்டம், சாலைமறியலுக்கு பின்னர் ஏன் கட்சி ஆரம்பித்தேன் என்றால், இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட நாம், ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆட்சியாளரிடம் ஏன் கேட்க வேண்டும்? என்று எண்ணி நாம் ஆட்சிக்கு வந்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்போம் என நினைத்தேன். அதனாலேயே கட்சி தொடங்கினேன்.

எனது ஆசையை நான் பலமுறை தெரிவித்து இருக்கிறேன். இன்று வரை நமது ஆட்சி வரவில்லை. பல சோதனை செய்தும் வெற்றி கிடைக்கவில்லை. 10.5 % விழுக்காடு எனக்கு மகிழ்ச்சி என்றாலும், பெரும் மகிழ்ச்சி இல்லை. நாம் ஆட்சியில் அமர்ந்து தமிழகத்தில் உள்ள 370 சமூகத்திற்கும் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பிற உரிமைகளை பகிர்ந்து அளிக்க வேண்டும். அதனை வழங்கும் ஆட்சி அதிகரித்தல் அன்புமணி இருக்க வேண்டும். அதனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். ஆனால், எத்தனை சொன்னாலும் பலர் தலையை ஆட்டிக்கொண்டு செல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் 15 நாட்கள் அதுபோல செய்வது சரியானதா? அது சரியானது கிடையாது. அதனால் நமது பயனை அடைய முடியாது. 

சஞ்சீவராயர் நவீனதம்மாள் பெற்றெடுத்த இராமதாஸ் இல்லையென்றால் வன்னியர் சமூகத்திற்கு என்ன நடத்திருக்கம் என நினைத்து பாருங்கள். கடைக்கோடியில் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அளவு என அனைத்து நிலையிலும் பின்தங்கி இருப்போம். இராமதாஸ் இல்லை என்று சொன்னால் என்னவாகும் என வன்னியர்கள் சிந்து பாருங்கள். 10.5% எதிர்ப்பவர்களுக்கு ஒன்றேயொன்றை தெரிவிக்கிறேன். அதனை செய்யுங்கள். கடந்த 33 வருடத்தில் உங்களுக்கு அல்லது உங்களது ஜாதிக்கு என்ன கிடைத்து? என டி.என்.பி.எஸ்.சியில் கேட்டு பதில் தாருங்கள். 69 % யார் யாருக்கு சென்றுள்ளது? என்பதை 10.5 % எதிர்ப்பவர்கள் மனு கொடுத்து, இறுதியான 10 வருடத்தில் வேலைவாய்ப்பு தமிழக அளவிலான இட பங்கீட்டில் கேளுங்கள். அதில் 33 விழுக்காடு Open Competition என்ன ஆனது? என கேளுங்கள். வறட்டு கூச்சல் வேண்டாம். இராமதாஸ் நீதியின் பார்க்கும் இருப்பவன். 

நான் அனைத்து சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க கூறியிருக்கிறேன். அதனை கட்டாயம் நான் செய்வேன். அன்புமணி செய்வார். எங்களுக்கு பின்னால் நீங்கள் வாருங்கள். Open Compettion-இல் நாம் வர வேண்டும். நாம் 31 விழுக்காடில் எவ்வுளவு வாங்குகிறோம் என்பதை பொறுத்து தான், இந்த வன்னியர் சமூகம் கல்வியில் எப்படி முன்னேறியுள்ளது என்பதை உணர்த்த முடியும். நாம் பல சந்தர்ப்பத்தில் தோல்வியை தழுவியுள்ளோம். சுதந்திரத்திற்கு 62 வருடத்திற்கு மேலாகி போராடினார்கள். நாம் 42 வருடம் போராடி இருக்கிறோம். இந்த இரண்டு போராட்டத்தில் நமது போராட்டமே சிறந்தது. New York Times பத்திரிகையில் எனது புகைப்பதை பதிவு செய்து அரைப்பக்க அளவுக்கு செய்தி எழுதுகிறார்கள் என்றால் எப்படிப்பட்ட போராட்டம் என சிந்தியுங்கள். இங்கு பலரும் நமது போராட்டத்தின் வீரியத்தை மறைத்துள்ளார்கள். அது நமக்கே தெரியாத வண்ணம் இருக்கிறது. இந்தியாவிலேயே இப்படியொரு போராட்டம் நடக்கவில்லை என்பதை ஆட்சியாளர்கள் நன்கு அறிவார்கள். 

விழிப்போரே நிலைக்காண்பான், விழிப்போரே சுதாரித்து செயல்படுவான் என்று கூறுவார்கள். கேரளாவில் ஈழவர் சமூகம் பல போராட்டத்திற்கு பின்னர் முன்னேறி வந்தது. தமிழகத்தில் தொட்டால் தீட்டு என்றால், கேரளாவில் பார்த்தாலே தீட்டு. இன்று அவர்கள் பல அரசுத்துறையில், வெளிநாடுகளில் முக்கிய பெரிய பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்கள். சமூக முன்னேற்ற அமைப்பு SIS சார்பாக சிறப்பு மையங்கள் நடத்தப்பட்டு, திட்டமிட்டு செயல்பட்டு நாம் முன்னேற வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொடுத்த சுஷில் குமார் ஷிண்டேவை நேரில் சந்தித்து மாநாடு போட்டு பாராட்டினோம். அதுபோல தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். என்னை பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். இட ஒதுக்கீடு சம்பந்தமாக எதிர்ப்பவர்களை நான் சந்திக்க வேண்டும். அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். 

அவர்களுக்கு விளக்கம் அளித்ததும் வன்னிய இனம் மீது உள்ள இனம்புரியாத எதிர்ப்பு நீங்கும், அவர்களும் நம்முடன் பயணிப்பார்கள். இளைஞர்கள், சிறுவர்கள் சுக்கா.. மிளகா.. சமூக நீதி? புத்தகத்தை படித்து இட ஒதுக்கீடு வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு குறித்து தெரியாத நபர்களுக்கும் அதனை தெரிப்படுத்துங்கள். பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள். நமது போராட்டத்திற்கு முழு வெற்றிக்கான பதில் நமது ஆட்சி மட்டுமே. பல சமுதாயம் ஏமாற்றப்பட்டுள்ளது. அவர்களும் முன்னேற வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி இந்த சமூகத்தின் வளர்ச்சியில் தான் உள்ளது. மக்கள் நம்மையும், நமது கொள்கையையும் புரிந்துகொள்ளவில்லை. முதல்வராக அன்புமணி வர வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால், தமிழகம் முன்னேறிவிடும். கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை மேற்கொள்ளுங்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் நமது உழைப்பை பார்க்க வேண்டும் " என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Speech Full Appreciation Ceremony 31 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->