#Breaking: வீரபாண்டி இராஜா மறைவுக்கு டாக்டர் இராமதாஸ் இரங்கல்..!  - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் இளைய மகன் முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மாரடைப்பால், அவரது பிறந்த நாளான இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கத்தின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், " எனது நண்பர் வீரபாண்டியாரின் புதல்வரும், திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளருமான  வீரபாண்டி இராஜா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அரசியலால் வேறுபட்டு இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே வீரபாண்டி இராஜா திகழ்ந்தார். எனது அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக திகழ்ந்தார். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அரசியலில் உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். யாருக்கும், எந்தத் தீமையும் நினைக்கக் கூடத் தெரியாதவர். அவரது மறைவு குறித்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

வீரபாண்டி இராஜாவுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாள் மகிழ்ச்சியாகவும், கனவுகளுடனும் விடிந்திருக்கும். மகிழ்ச்சியும், உற்சாகமும் ஒரு சில மணி நேரங்களில் சோகமாக மாறும் என்பதை  யாரும் எதிர்பார்க்கவில்லை. இராஜா இன்னும் நீண்டகாலம் வாழ்ந்திருக்க வேண்டும். அவரது மறைவு வீரபாண்டியாரின் குடும்பத்திற்கும், சொந்தங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

வீரபாண்டி இராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Mourning Salem Veerapandi Raja Passed Away 2 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->