கொரோனா குறித்த பிரதமரின் அனைத்துக் கட்சிக் கூட்டம் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 526 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95,34,965 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89,73,373 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,38,648 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ்  குறித்து விவாதிக்க நாளை (04.12.2020) அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். 

நாளை காலை 10.30 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு கொரோனா தொடர்பான தமது கருத்துகளை தெரிவிக்க இருக்கிறார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தமிழக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாகவும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு தொடர்பாக, மார்ச் மாதம் ஊரடங்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு பல வாரங்களுக்கு முன்னதாக ஊரடங்கை அமல்படுத்தக்கூறி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்து இருந்தார். 

கொரோனா தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியிருந்தார். கொரோனா ஊரடங்கு அமலானதும், கொரோனாவில் இருந்து தப்பிக்க எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கும் ஆலோசனை வழங்கி வந்த நிலையில், மோடியின் தலைமையிலான விவாத கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Conference to PM India about Corona Virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->