#சற்றுமுன் | பிரதமர் மோடியை சந்தித்த ஓபிஎஸ்?! - Seithipunal
Seithipunal


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். தமிழகத்தில் அதிமுக பாஜக இடையான கூட்டணி முறிந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு முதல் மாநிலமாக தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார்.

இன்று காலை 10:30 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, மதியம் மூன்று மணி அளவில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 1200 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள பன்னாட்டு புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது 19850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்க உள்ளார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், திருச்சி விமானம் நிலையம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருமான ஓ பன்னீர்செல்வம் சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியின் உடனான ஓபிஎஸ்-ன் சந்திப்பு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற உள்ளதாகவும், இதற்காக ஓப் பன்னீர்செல்வம் நேரம் கேட்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இருத்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi meet OPS in Trichy Airport


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->